Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மதுரையில் வாழைத்தார் விலை கடும் சரிவு

மதுரையில் வாழைத்தார் விலை கடும் சரிவு

கடந்த 10 நாட்களுக்கு முன்பு செவ்வாழை ஒரு தார் ரூ.900 முதல் ரூ.1000 வரை விலைபோன நிலையில், தற்போது ரூ.700ஆக சரிந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தேவை குறைவால் மதுரையில் வாழைத்தார்களின் விலை வெகுவாக சரிந்துள்ளது.

மதுரை ஓபுளா படித்துறையில் பிரசித்திபெற்ற வாழைத்தார் சந்தை உள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாழைப் பழங்களுக்கு தேவை அதிகரித்ததால் இங்க விலை கடுமையாக உயர்ந்தது. ஆயுத பூஜை முடிந்தும் அடுத்த சில நாட்களுக்கு விலை குறையவில்லை. இந்நிலையில், தற்போது வாழைப்பழம் விலை கடுமையாக சரிந்துள்ளது.

இதுகுறித்து வாழைப்பழ வியாபாரிகள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் கூறும்போது, தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் மக்கள் ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் வாழைப்பழம் தேவை குறைந்து விற்பனை சரிந்துவிட்டது. 

கடந்த 10 நாட்களுக்கு முன்பு செவ்வாழை ஒரு தார் ரூ.900 முதல் ரூ.1000 வரை விலைபோனது. தற்போது ரூ.700ஆக சரிந்துள்ளது. மற்ற வகை வாழை பழங்களின் விலையும் ஒரு தார் ரூ.100 முதல் ரூ.300 வரை சரிந்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்றார்.

மற்ற வாழை பழங்களின் விலை விபரம் (ஒரு தார்) வருமாறு: நாடு – ரூ.500, ரஸ்தாலி – ரூ.400, பூவண் – ரூ.450, பச்சை ரூ.400, கற்பூரவல்லி – ரூ.300 என்ற விலையில் விற்கப்பட்டது.

முந்தைய செய்தி
டாபர் இந்தியாவின் Q2 நிகர லாபம் 11.70 % உயர்வு
அடுத்த செய்தி
Madras High Court restrains illegal online release of Suriya’s ‘Scene’

தொடர்புடைய செய்திகள்